Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனதாலும் துன்பம் செய்யாதீர்!

மனதாலும் துன்பம் செய்யாதீர்!

மனதாலும் துன்பம் செய்யாதீர்!

மனதாலும் துன்பம் செய்யாதீர்!

ADDED : செப் 04, 2008 10:48 AM


Google News
Latest Tamil News
<P>'நியாயம்' என்றால் 'முறை' என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறைதவறி செய்யும் செயல் களால் துன்பம் தான் உண்டாகும். ஒரே செயல் ஒருவருக்கு நியாயமாகவும், மற்றொருவருக்கு அநியாயமாகவும் தோன்றும். ஆனால், அந்த மாதிரி சமயங்களில் நம்மை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் பொதுவான நியாயத்தைப் பின்பற்றுவதே சிறந்ததாகும். <BR>குரங்கினைப் போன்று சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வார்கள். அதற்காகத் தான் 'குரங்குப்பிடி' என்று குறிப்பிடுவதுண்டு. பகவானே உதற நினைத்தாலும், பக்தியினால் நாம் அவரைக் கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் 'சிக்கெனப் பிடித்தேன்' என்று குறிப்பிடுவதைக் காணலாம். <BR>அகிம்சை என்றால் உடலால் பிறருக்கு கஷ்டம் தருவது மட்டுமல்ல. மனதால், பேச்சால், பார்வையால் என்று எந்த ஒரு காரணம் கொண்டும் ஒருவருக்கு துன்பம் விளைவித்தாலும் அது ஹிம்சையாகி விடும். இன்னும் சொல்லப்போனால் நமக்கு துன்பம் தருபவருக்கும் துன்பம் தராமல் அவரிடமும் அன்பு காட்டுவது தான் அகிம்சையின் இலக்கணமாகும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us