Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/வெற்றி மட்டுமே குறிக்கோள்

வெற்றி மட்டுமே குறிக்கோள்

வெற்றி மட்டுமே குறிக்கோள்

வெற்றி மட்டுமே குறிக்கோள்

ADDED : பிப் 14, 2012 09:02 AM


Google News
Latest Tamil News
* உண்மையான பக்தி இருந்தால் தைரியம் ஏற்படும். மனதைரியம் உள்ளவனே பக்தி செலுத்த தகுதியானவன்.

* பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமாக வளர்க்காத நாட்டில், புதிய மகான்கள் பிறக்க வழியில்லை.

* உழைப்பையும், அன்பையும், சமத்துவ நினைப்பையும் அனைவரும் கடைபிடித்தால், அநியாயமான அழிவுகள் ஏற்படாது. உலகம் அழியாமல் காப்பாற்றப்படும்.

* பழங்கதைகளை பேசிக் கொண்டிருப்பதை விட, இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தாகத்துடனும், உண்மையுடனும் பிரார்த்தித்தால் பலன் கிடைக்கும்

* வீட்டில் தெய்வத்தைக் காணத் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தில் கடவுளைக் காணமாட்டான்.

* அனைத்துவித செல்வங்களுக்கும் அறிவு தான் வேர். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களிலும் அறிவோடு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்.

* தைரியம் வேண்டும். எதுவந்தாலும் நம்மை பிறர் தாழ்வாகக் கருதவும், தாழ்வாக நடத்தவும் இடம் கொடுக்கக் கூடாது. மன உறுதி வேண்டும். வெற்றி மட்டுமே குறிக்கோள் என்ற எண்ணம் வேண்டும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us