Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/உழைப்பின் நோக்கம்

உழைப்பின் நோக்கம்

உழைப்பின் நோக்கம்

உழைப்பின் நோக்கம்

ADDED : பிப் 10, 2012 08:02 AM


Google News
Latest Tamil News
* பெண்கள் ஆண்களிடம் அன்புடன் இருக்க வேண்டுமானால், ஆண்கள் பெண்களிடம் அசையாத அன்பு செலுத்த வேண்டும். அன்பே அன்பை விளைவிக்கும்.

* வயிறு நிறைய அன்னம் இடுவது தான் மேலான தர்மம். இந்த தர்மத்தால் அனைவருடனும் கூடி வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* பிறர் சொத்தை அபகரிக்க மனதால் நினைத்தால் கூட, திருட்டுக்கு சமம். அதற்குரிய தண்டனை மனிதன் மூலம் கிடைக்காவிட்டாலும், கடவுள் மூலம் அவசியம் விதிக்கப்படும்.

* தனக்கும், குடும்பத்திற்கும், பிறந்த நாட்டுக்கும், மற்றவர்களுக்கும் உபயோகப்படும் வகையில் செலவழிப்பதே உழைப்பின் நோக்கம்.

* மாறுதல் என்பது உலகின் விதி. அதற்காக, அனைத்தையும் ஒரேயடியாக மாற்றுவதல்ல. நல்ல அர்த்தமுள்ள அம்சங்களை வைத்துக் கொண்டு. பயனில்லாத கெட்ட அம்சங்களை மாற்றி விட வேண்டும்.

* மண்ணும், காற்றும், நிலாவும், நம்மைச் சுற்றி நிற்கும் உயிர்களும், நீயும், நானும் தெய்வமென்று வேதம் கூறுகிறது. இதனைத் தவிர வேறு தெய்வமில்லை.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us