Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நல்ல வழியில் பொருள் தேடு!

நல்ல வழியில் பொருள் தேடு!

நல்ல வழியில் பொருள் தேடு!

நல்ல வழியில் பொருள் தேடு!

ADDED : நவ 01, 2011 09:11 AM


Google News
Latest Tamil News
* ஈசன் நமக்கு அறிவை துலக்கமாக தந்திருக்கிறான். அறிவை நமது வடிவமாக அமைத்திருக்கிறான். ஆனால், அந்த அறிவு இன்பத்தை மட்டுமே விரும்புகிறது. எது நடந்தாலும், அறிவைப் பயன்படுத்தி தீர்வு கண்டு விடு.

* ஒரு தொழிலை திறம்பட, மிக கவனமாக செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும்.

* ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போது தான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

* நல்ல வழியில் பொருள் தேடச் சென்றால், உலகச் செல்வங்களையும், ஆன்மிக செல்வங்களையும் இறைவன் நமக்கு அளிப்பான்.

* மனிதன் என்பவன் தன்னைத்தானே ஆளவேண்டும், தன்னைத்தானே அறிய வேண்டும், தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டும், தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வகையில் தன் காலை மட்டுமே நம்ப வேண்டும்.

* நம்பிக்கை ஏற்பட்டால் வெற்றியுண்டு. நம்பிக்கை உள்ளவன் விடாமுயற்சி உடையவனாக இருப்பான்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us