Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/சுயபுத்தியுடன் நடந்து கொள்!

சுயபுத்தியுடன் நடந்து கொள்!

சுயபுத்தியுடன் நடந்து கொள்!

சுயபுத்தியுடன் நடந்து கொள்!

ADDED : நவ 07, 2011 10:11 AM


Google News
Latest Tamil News
* துணிவே தாய். அதிலிருந்து தான் கல்வி முதலிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளும் பிறக்கின்றன.

* அனைத்து மனிதர்களுக்கும் மனவலிமையுடன் இறைவன் அருள்பாலிக்கிறான். அவனை வணங்கினால் எண்ணியது அனைத்தும் நடக்கும்.

* முயற்சியின் துவக்கத்தில் பலர் உதவுவதில்லை. நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால், காலப்போக்கில் வெளியுதவிகள் தாமே வரும், ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை.

* தெய்வத்திடம் உண்மையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

* செல்வம் தேடுவது நியாயமாக இருந்தாலும், அவரவர் தகுதிக்கேற்ற வழிகளில் செல்வம் தேட வேண்டும்.

* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாதவன் பிறரைத் திருத்துவதற்கு அருகதை இல்லாதவன்.

* விளக்கிருந்தாலும் கண் வேண்டும். நான்கு பேர் துணையிருந்தாலும் தனக்கென சுயபுத்தி வேண்டும். குறிப்பாக, பெண்கள் சுயபுத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

- பாரதியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us