ADDED : அக் 11, 2010 07:10 PM

* வெள்ளைத் தாமரைப் பூவில்
வீற்றிருப்பவள் கலைமகள். அவள்
வீணையின் இனிய நாதமாக இருக்கிறாள். எல்லை இல்லாத இன்பம் தரும் கவிதை இயற்றும் கவிஞர்களின் உள்ளத்தை
இருப்பிடமாகக் கொண்டிருக்கிறாள்.
* மேன்மையான வேதங்களின் உள்நின்று
பிரகாசிப்பவள் இவளே! கள்ளம் கபடம் இல்லாத
முனிவர்களின் கருணை நிறைந்த மொழிகளில் கலந்து நிற்பதும் கலைமகளே.
* பெண்கள் பாடும் இனிய பாட்டிலும், குழந்தைகளின்
மழலையிலும், குயிலின் இனிய குரலிலும், கிளியின் நாவிலும், சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த
கோபுரத்திலும் அவள் வீற்றிருக்கிறாள்.
* மனதில் வஞ்சகம் இல்லாமல் தொழில் புரிபவர்களுக்குஎல்லாம் கலைமகளே குலதெய்வம். வித்தகர், சிற்பியர், நல்வழியில் பொருள் ஈட்டும் வணிகர், வீரத்துடன் ஆட்சி புரியும் மன்னர், வேதம் ஓதும் அந்தணர் ஆகிய அனைவரும் சரஸ்வதியிடமே தஞ்சம் அடைவர்.

-பாரதியார்