Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/அம்பிகையைப் போற்றுங்கள்

அம்பிகையைப் போற்றுங்கள்

அம்பிகையைப் போற்றுங்கள்

அம்பிகையைப் போற்றுங்கள்

ADDED : அக் 21, 2010 06:10 PM


Google News
Latest Tamil News
* அம்பிகையே! பராசக்தித்தாயே! எண்ணிய எண்ணங்கள் யாவும் நல்லமுறையில்

நிறைவேற வேண்டும். திடமான நெஞ்சம் வேண்டும். தெளிவான நல்லறிவு

வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தோட வேண்டும்.

* படைத்தல், காத்தல், மறைத்தல் என்னும்

முத்தொழில்களைப் புரிபவளே! கனியில் சுவையும்,

காற்றில் இயக்கமும் கலந்தது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்தவளே! உலகம் அனைத்தும் உனது அருளே வியாபித்திருக்கிறது. உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்.

* அமுதம்போன்றவளே! புதுமைக்குப் புதுமையாய்,

பழமைக்குப் பழமையாய், உயிருக்குள் உயிராக,

என்னுள்ளே நானாகவும், நான் என்பதை உணர்ந்தபின் தானாகவும் நின்று வழிகாட்டுபவளே! உன்னைச்

சரணடைகின்றேன்.

* கவலை என்னும் நோய் தீர்க்கும் மருந்தானவளே!

உலகைக் கட்டியுள்ள பேரிருள் நீக்கும் பேரொளிச் சுடரே! யோகியரின் மனதில் இருப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறேன்.

-பாரதியார்  




      Our Apps Available On




      Dinamalar

      Follow us