ADDED : செப் 29, 2017 11:24 AM
விஜயதசமி விரதம் பெண்மைக்கு உரியது. 'நவம்' என்பதற்கு 'ஒன்பது', 'புதியது' என்பது பொருள் உண்டு. இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும்.
இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என பெயர் சூட்டினர். ஒரு நாளை பகல், இரவு என பிரிப்பர். பகல் சிவனின் அம்சம். இரவு சக்தியின் அம்சம். எனவே தேவியைக் கொண்டாட ஏற்ற நேரம் இரவு. பகலில் விழித்திருந்த உயிர்களை, இரவு வடிவான தேவி, அமைதியாக உறங்கச் செய்து தாலாட்டுகிறாள். எல்லா உயிர்களும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் அவற்றை காப்பாற்றுகிறாள்.
வேதத்தில், 'சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன்' என கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் நவராத்திரியில் அவளை வணங்குகிறோம். நவராத்திரியின் முடிவில் அவளை வணங்கியதால், கிடைத்த பலனுக்கு நன்றி சொல்லும் விதத்தில் வெற்றித்திருவிழாவாக விஜயதசமி கொண்டாடுகிறோம்.