ADDED : நவ 27, 2020 01:29 PM
17ம் நுாற்றாண்டில் டச்சுக்காரர்கள் திருச்செந்துார் முருகன் சிலையைக் கடத்தினர். புயல் வரவே சிலையைக் கடலுக்குள் தள்ளிவிட்டனர். வடமலையப்ப பிள்ளை என்னும் பக்தர் வேறொரு சிலை செய்ய முடிவெடுத்தார். ஆனால் முருகன் அவரது கனவில் கடலில் சிலை இருப்பதை உணர்த்தினார். அதை தேடி சென்ற போது, நடுக்கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதந்தது. கனவில் முருகன் குறிப்பிட்ட இடம் இதுவென அறிந்த வடமலையப்பபிள்ளை, அங்கு பணியாளர்களை மூழ்கிப் பார்க்கச் செய்த போது சிலை கிடைத்தது.