
'அவதரித்தல்' என்பதற்கு 'இறங்குதல்' எனப் பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு, பூமிக்கு இறங்கி வருவதையே 'அவதாரம்' என்கிறோம். இதன் நோக்கம் தீயவர்களை அழிப்பது மட்டுமல்ல. பூமியில் நேரடியாக தோன்றி, நல்லவர்களோடு வாழ வேண்டும் என்பதே. அப்போது தர்ம வழியில் அவரும் வாழ்ந்து நம்மையும் தர்ம வழியில் வாழச் செய்கிறார் மகாவிஷ்ணு. நல்லவரைக் காத்தல், தீயவரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் ஆகியவையே அவதாரத்தின் நோக்கம்.