Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சனீஸ்வரனையே எதிர்த்தவர்

சனீஸ்வரனையே எதிர்த்தவர்

சனீஸ்வரனையே எதிர்த்தவர்

சனீஸ்வரனையே எதிர்த்தவர்

ADDED : ஜூன் 24, 2011 03:00 PM


Google News
Latest Tamil News
ஒருமுறை நவக்கிரகங்களில் ஒன்றான சனி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்ய ஆயத்தமானார். இதனால், நாட்டில் கடும்பஞ்சம் உருவாகும் என்பதை, ஜோதிடர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனீஸ்வரனுடன் போருக்குப் புறப்பட்டார். சூரிய மண்டலத்திற்கு மேலே இருக்கும் நட்சத்திரமண்டலத்திற்கு சென்றார். சனீஸ்வரர் அவரிடம், '' தசரத சக்கரவர்த்தியே! வாரும்! உம் தவபலத்தையும், வீரத்தையும் பாராட்டுகிறேன். வேண்டும் வரத்தை தருகிறேன்,'' என்றார். அவரிடம் தசரதர், ''சனீஸ்வரரே! ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்ல வேண்டாம்,'' என்று வேண்டிக்கொண்டார். சனீஸ்வரரும் சம்மதித்து அருள்புரிந்தார். அப்போது அவரைப் போற்றி தசரதர் பாடிய சனி ஸ்தோத்திரம் புகழ்பெற்றதாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us