Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/ஐந்து தெய்வபூஜை

ஐந்து தெய்வபூஜை

ஐந்து தெய்வபூஜை

ஐந்து தெய்வபூஜை

ADDED : ஜூன் 24, 2011 03:04 PM


Google News
Latest Tamil News
சூரியன், பார்வதி, திருமால்,விநாயகர், சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபடும் முறைக்கு 'பஞ்சாயதன பூஜை' என்று பெயர். நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கும் கல்லை சிவனாகவும், சுவர்ணமுகி ஆற்றில் கிடைக்கும் கல்லை சக்தியாகவும், நேபாளத்தில் இருக்கும் கண்டகியில் கிடைக்கும் சாளகிராமக் கல்லை விஷ்ணுவாகவும், தஞ்சாவூர் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிகத்தை சூரியனாகவும், கோணபத்ர ஆற்றில் கிடைக்கும் கல்லை கணபதியாகவும் பூஜிப்பர். ஆனால், உலகில் உள்ளது ஒரே பரம்பொருள் தான். அதையே பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள்' என்பதை 'ஏகம் ஸத் விப்ராம் பஹுதா நாதாந்தி' என்று வேதம் குறிப்பிடுகிறது.

தலையெழுத்தை மாற்றும் பரிகாரம் ஒருமனிதனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 'அவனவன் தலையெழுத்துப்படி நடக்கும்' என்று குறிப்பிடுவர். பிறந்த நட்சத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஐந்தும் சேர்ந்ததை 'பஞ்சாங்கம்' என்று குறிப்பிடுவர். தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு 'பிரம்ம லிபி' என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, 'நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே' என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், 'பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை' என்று சொல்லுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us