ADDED : செப் 30, 2020 06:14 PM
பிரம்மாவிடம் ஒருமுறை நாரதர், '' பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?” எனக் கேட்டார். ''புரட்டாசி சனி விரதமே சிறந்தது” என்றார் பிரம்மா. புரட்டாசி சனிக்கிழமை அன்று விரதமிருப்போர் துளசி தீர்த்தம் அருந்தி விரதம் தொடங்குவர். மதியம் ஒருவேளை உணவும், இரவு பாலும், பழமும் சாப்பிடுவர். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பானகம் போன்ற நைவேத்யங்களை படைத்து தானம் அளிப்பர். இதன் மூலம் கிரக தோஷம் அகலும். ஆயுள் அதிகரிக்கும். உடல்நலம் சிறக்கும். செல்வம் சேரும்.