Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/இவரைச் சுற்றாதே...

இவரைச் சுற்றாதே...

இவரைச் சுற்றாதே...

இவரைச் சுற்றாதே...

ADDED : ஏப் 26, 2024 03:05 PM


Google News
கோயிலுக்கு சென்றால் வலம் வருவோம். இதனால் புண்ணியம் சேரும். ஆனால் அங்குள்ள சுவாமி ஒருவரை மட்டும் சுற்றக்கூடாது. யார் அவர்?

சிவனடியாரும், எப்போதும் தியானத்தில் இருப்பவரான சண்டிகேஸ்வரர்தான். இவரை தரிசிக்காமல் வந்தால் கோயிலுக்கு சென்ற பலன் கிடைக்காது. வலக்கையின் நடு விரல்கள் மூன்றையும் இடக்கையால் தட்டுவது போல கையை வைத்து இவரை வழிபட வேண்டும்.

எப்போதும் வணங்குவதுபோல் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கக்கூடாது. அதே நேரத்தில் சத்தமும் வரக்கூடாது. மீறி சத்தம் கேட்டால் அவரது தியானம் கலைந்துவிடும். அதோடு அவரை வலம் வரவும் கூடாது. காரணம் நிர்மால்யதீர்த்தம் என்னும் அபிஷேகம் விழும் கோமுகி அருகில் இவரது சன்னதி இருக்கும். கோமுகியை தாண்டக்கூடாது என்பதால் இவரை வலம் வருவதில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us