ADDED : ஏப் 26, 2024 03:03 PM

தெரியாமல் பாவம் செய்து விட்டு வருந்தினால் அதற்கு பரிகாரம் உண்டு. ஆனால் வேண்டுமென்றே பாவம் செய்தால் அதற்கு பரிகாரம் இல்லை.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள கஞ்சனுாரில் வாழ்ந்தவர் ஹரதத்த சிவாச்சாரியார். இவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அக்னீஸ்வரரை தினமும் வழிபடுவார். இவர் வேதம், ஆகமம் ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார்.
ஒரு முறை தன் வீட்டுவாசலில் நெல்லை உலர்த்தியபோது, அவ்வழியே சென்ற காளை ஒன்று சாப்பிட்டது. அதைப்பார்த்த அவரது மனைவி அதை துரத்தினாள். இதை அறிந்த ஹரதத்த சிவாச்சாரியார், தன் மனைவி தவறு செய்துவிட்டாளே என வருந்தினார். 'வந்தது காளை அல்ல. நந்தியம்பெருமானே' என உணர்ந்தார். இதற்கு பரிகாரமாக ஸ்லோகம் ஒன்றை எழுத, அது முழுமை அடையவில்லை. பின் சிவபெருமானின் அருளால் அந்த ஸ்லோகம் பூர்த்தியானது. அந்த ஸ்லோகம்தான் இது.
ஞானக்ஞான ப்ரயுக்தானாம் பாபனாம் மகதாமபி
ஏகாந்த நிஷ்க்ரதி: சம்போஸ் ஸ்கிர்தேவஹி கீர்தனத்.
மேலும் 'சிவ' என்று சொன்னாலே தெரியாமல் செய்த பாவமும் தீரும் என்கிறார் ஹரதத்த சிவாச்சாரியார். இதையே திருமூலரும் சொல்லியுள்ளார்.
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.
சிவநாமம் சொல்வோம்.