ADDED : மார் 15, 2024 11:39 AM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளது புஷ்பவனேஸ்வரர் கோயில். இத்தலத்திற்கு வந்தால் காசி, ராமேஸ்வரத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
தர்மயக்ஞன் என்னும் அந்தணர் தன் தந்தையின் அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் செல்லும் போது, இத்தலத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவருடன் வந்த உறவினர் ஒருவர் கலசத்தை திறந்து பார்த்த போது அஸ்தி பூவாக மாறியிருப்பதைக் கண்டார். ஆனால் அதை தர்மயக்ஞனிடம் சொல்லவில்லை. இருவரும் ராமேஸ்வரத்தை அடைந்தனர். அப்போது உடன் வந்தவர் மீண்டும் கலசத்தை திறந்து பார்த்தார். அதில் அஸ்தி இருந்தது. திகைப்பில் ஆழ்ந்த அவர் திருப்புவனத்தில் கண்ட காட்சியை தெரிவிக்கவே மீண்டும் திருப்புவனத்திற்கு வந்தனர். மீண்டும் அஸ்தி பூவாக மாறியது. ராமேஸ்வரத்தில் அஸ்தியாக இருந்தது இங்கு பூவாக மாறியதால் இத்தலம் காசி, ராமேஸ்வரத்தை விட 16 மடங்கு புண்ணியம் மிக்கது எனப்படுகிறது. இங்கு ஓடும் வைகையில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து விளக்கேற்றுகின்றனர்.
புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கர புரம், பிரம்ம புரம், ரசவாத புரம் என இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு.