ADDED : மார் 08, 2024 03:13 PM

திருவாரூர் அருகிலுள்ள திருமருகல் என்னும் சிவத்தலத்தில் வணிகனின் மகள் ஒருத்திக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்காக மணமக்கள் அங்கு தங்கியிருந்த போது, பாம்பு தீண்டி மணமகன் இறந்தான். அப்போது கோயிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் மணமகள் அழுவதைக் கண்டு இரங்கினார்.
திருமருகல் சிவனான மாணிக்கவண்ணர் மீது தேவாரம் பாடினார். துாங்கி எழுவது போல மணமகன் கண் விழித்தான். குறித்தபடியே அந்த நாள் அந்த முகூர்த்தத்திலேயே திருமணம் நடந்தது. நாகதோஷத்தை போக்குபவராக மாணிக்கவண்ணர் (சிவன்) இங்கிருக்கிறார். கும்பகோணத்தில் இருந்து 46 கி.மீ., திருவாரூரில் இருந்து 26 கி.மீ.,