ADDED : டிச 15, 2023 11:19 AM

நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் உள்ளது கணபதீஸ்வரர் கோயில். முன்பு இந்த ஊரில் இருந்த மரங்கள் சிவப்பாக இருந்தன. இப்படி ஆனதற்குக் காரணம் விநாயகர். இவர் கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தபோது அவனுடைய ரத்தம் இந்தக் காடு முழுதும் பரவியது.
இதனால் விநாயகரும் செக்கச்செவேலென்று ஆனார். அதாவது கறுப்பான யானை உடம்பில் சிவப்பு நிறம் பட்டதால், 'கபில' நிறமாக மாறினார். இப்படி ஒரு வீரனை கொன்றதால் இவருக்கு 'வீரஹத்தி தோஷம்' ஏற்பட்டது. இதனால் இங்கு ஒரு லிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தார் விநாயகர். இதனால் இக்கோயில் 'கணபதீச்சுரம்' என பெயர் பெற்றது.