ADDED : டிச 15, 2023 11:18 AM

மனிதனின் ஆயுள், தொழிலை நிர்ணயிப்பவர் சனீஸ்வரர். இதனால் அவருக்கு ஆயுள்காரகர், ஜீவனகாரகர் என்ற பெயர் வந்தது. ஒருவரது ஜாதகத்திலுள்ள சனியின் நிலையைப் பொறுத்தே ஆயுளும், தொழிலும் அமையும். அதுமட்டும் இல்லை. சனீஸ்வரரின் பலம் பெற்ற ஜாதகர்கள் மக்கள் செல்வாக்குடன் திகழ்வார்கள். சனியால் பாதிக்கப்படுபவர்கள் சனிக்கிழமையில் விரதமிருந்து பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபடலாம். அப்போது அவருக்கு எள் எண்ணெய் தீபமேற்றுங்கள். ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் 108 முறை சொன்னால் கைமேல் பலன் உண்டு.
நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்
நீலாஞ்ஜந ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்