ADDED : நவ 24, 2023 09:37 AM

திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்போ அது போல 'பனை ஓலைக் கொழுக்கட்டை' பிரசாதமும் சிறப்பு.
பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலவை செய்து பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டை தான் பனை ஓலைக் கொழுக்கட்டை.
வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு எதுவுமில்லை என கூறலாம். கார்த்திகை விளக்கிட்டு விழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்.