Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பூம்பாவாய்...

பூம்பாவாய்...

பூம்பாவாய்...

பூம்பாவாய்...

ADDED : ஜன 01, 2025 01:12 PM


Google News
Latest Tamil News
மயிலையே கயிலை; கயிலையே மயிலை எனப்படும் சிவத்தலம் சென்னை மயிலாப்பூர்.

இங்கு சிவநேசன் செட்டியார் என்னும் சிவனடியார் வாழ்ந்தார். இவருடைய மகளான பூம்பாவை நந்தவனத்தில் பாம்பு தீண்டி இறந்தாள். அவளின் அஸ்தியை ஒரு குடத்தில் இட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரரை தரிசிக்க வந்த சிவனடியாரான திருஞான சம்பந்தரிடம் விபரத்தை சொல்ல, அவர் சிவன் மீது பதிகம் பாடினார். அதில் மாதம் தோறும் நடக்கும் திருவிழாக்களின் பெயரை சொல்லி, பூம்பாவையே நீ மட்டும் பார்க்காமல் போய் விட்டாயே... எனப் பாடினார். அவளும் உயிர் பெற்று வந்தாள். அப்பதிகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் இது.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us