Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/சக்திபீடக் காவலர்

சக்திபீடக் காவலர்

சக்திபீடக் காவலர்

சக்திபீடக் காவலர்

ADDED : நவ 21, 2024 03:22 PM


Google News
பிரம்மாவின் மனதில் இருந்து தோன்றியவர் தட்சன். இவரது மகள் தாட்சாயிணி. இவள் சிவனின் மீது காதல் கொண்டாள். தந்தையின் சம்மதம் இல்லாமல் சிவனை கணவராக அடைந்தாள்.ஒருமுறை யாகம் ஒன்றை தட்சன் தொடங்கினார். அதற்கு மகள் தாட்சயிணி, மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. யாகத்தை தடுக்க வேள்வியில் தாட்சாயிணி விழுந்து உயிர் விட்டாள்.

அவளது உடலைச் சுமந்தபடி இங்கும் அங்கும் சிவபெருமான் அலைந்தார். இதிலிருந்து இவரை விடுவிக்க மகாவிஷ்ணு சக்கராயுதத்தால் தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார். உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அவையே 51 சக்தி பீடங்களாகி அம்பிகை வழிபாட்டுக்குரிய கோயில்களாக உள்ளன. அசுர சக்திகளிடம் இருந்து

இந்த சக்திபீடங்களை காக்கும் காவலராக இருப்பவர் பைரவரே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us