ADDED : நவ 21, 2024 03:21 PM
அந்தகாசுரன் என்பவன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவத்துடன் அலைந்தான். தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டான். சிவனிடமிருந்து இருள் என்னும் சக்தியைப் பெற்று உலகத்தையே இருள் மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் உயிர் பிழைக்க சிவபெருமானைச் சரணடைந்தனர். பைரவரை உருவாக்கி இருளை மறையச் செய்தார் சிவபெருமான்.