Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/வாழ்வு பிரகாசிக்க...

வாழ்வு பிரகாசிக்க...

வாழ்வு பிரகாசிக்க...

வாழ்வு பிரகாசிக்க...

ADDED : அக் 25, 2024 08:14 AM


Google News
Latest Tamil News
தீபாவளி நாளில் எல்லா நீர்நிலைகளிலும் கங்கையும், விளக்காக காமாட்சியும், அதன் சுடராக மகாலட்சுமியும் இருப்பார்கள். அன்று நீராடும்போதும், விளக்கேற்றும்போதும் கீழ்க்கண்ட துதிகளை சொல்லுங்கள். இதன்மூலம் தெய்வங்களின் அருள் கிடைக்கும். வாழ்வு பிரகாசிக்கும்.



நீராடும் முன்

நீராடத் தொடங்கும் முன் சிறிது நீரைக் கையில் எடுத்துக் கொண்டு பின்வரும் துதியைச் சொல்லி விட்டு பின்னர் நீராடுங்கள்.

ஓம் நம சிவாயை நாராயண்யை தச தோஷ

ஹராயை கங்காயை ஸ்வாஹா:

சிவபெருமானின் திருச்சடையில் உறைபவளே. நாராயணரின் பாதகமலங்களை நீராட்டி மகிழ்பவளே. எல்லாவித பாவங்களையும் போக்குபவளே. கங்கையே உன்னை வணங்குகிறேன்.

விளக்கேற்றும்போது

ஸ்ரீசக்ர மத்யே வசந்தீம் பூத

ராட்சச பிஸாசாதி துஷ்டான் ஹரந்தீம்

ஸ்ரீகாமகோட்யாம் ஜ்வலந்தீம் காம

ஹுனஸ்ஸு காம்யாம் பஜே தேஹி வாசம்

ஸ்ரீசக்கரத்தில் நடுவில் வாசம் செய்பவளே. பூதம், பிசாசு, ராட்சதர்கள் முதலான துஷ்ட சக்திகளை அழிப்பவளே. காமகோடி பீடத்தில் அருள்பவளே. ஆசையற்றவர்களால் எளிதாக அடையக் கூடியவளே. பக்தர் தம் விருப்பத்தை நிறைவேற்றும் காமாட்சி அன்னையே. உன்னை வணங்குகிறேன். எல்லா நன்மைகளையும் அருள்வாயாக.

மகாலட்சுமி துதி

ஓம் ஸ்ரீயே ஸ்ரீகரி தனகரி தான்யகரி

ஏஹ்யா அச்ய பகவதி வஸுதாரே ஸ்வாஹா

செல்வத்தின் திருமகளே. தனம், தானியம் முதலான எல்லாவற்றையும் அருள்பவளே. ஒப்பில்லாதவளே. பக்தர்களின் மீது கருணையை பொழிபவளே. உன்னை ஆராதிக்கிறேன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us