மவுனமாக இருந்தால் மனசாட்சியின் மெல்லிய குரலை கேட்க முடியும். 'மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே' எனச் சொல்வதுண்டு. பேசுவதை விட மவுனத்திற்கு வலிமை அதிகம். கல்லால மரத்தடியில் இருக்கும் தட்சிணாமூர்த்தி மவுனமாக இருந்தே சீடர்களுக்கு உபதேசம் செய்ததால் மவுனச்சாமி, ஊமைத்துரை எனப் பெயர் பெற்றார்.
வாரம் ஒருமுறை வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு மவுன விரதம் மேற்கொள்வது சிறப்பு. இதனால் சொன்னது பலிக்கும் தன்மை கிடைக்கும். குருவருள், திருவருள் சேரும்.
வாரம் ஒருமுறை வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு மவுன விரதம் மேற்கொள்வது சிறப்பு. இதனால் சொன்னது பலிக்கும் தன்மை கிடைக்கும். குருவருள், திருவருள் சேரும்.