ADDED : அக் 09, 2024 01:19 PM

சரஸ்வதிக்கு வாகனம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தாலும், நீரை விட்டு விட்டு பாலை மட்டும் அருந்தும் அன்னத்தைப் போல, உலகில் நன்மை, தீமை கலந்திருந்தாலும் தீமையை விடுத்து, நன்மையை மட்டும் மனிதன் ஏற்க வேண்டும் என்பது இதன் தத்துவம்.
சரஸ்வதிக்குரிய மற்றொரு வாகனம் மயில். இது நடனமாடும் போது தோகையை விரிக்கும். மற்ற நேரத்தில் சுருக்கிக் கொள்ளும். அதுபோல தேவையான சமயத்தில் அறிவுத்திறத்தைக் காட்டினாலும் மற்ற இடத்தில் அடக்கமுடன் இருக்க வேண்டும் என்பது இதன் தத்துவம்.
அன்னத்தில் இருப்பவளுக்கு ஹம்ஸ வாஹினி என்றும், மயில் மீதிருக்கும் சரஸ்வதிக்கு வர்ஹ வாஹினி என்றும் பெயர்.