Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்

நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்

நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்

நெருப்புக்கு பூஜை நடக்கும் அம்மன் கோயில்

ADDED : செப் 29, 2017 11:26 AM


Google News
Latest Tamil News
பஞ்சாப் மாநிலம் காங்கரா மாவட்டத்தில் உள்ள 'ஜ்வாலாமுகி' அம்மன் கோயிலில் சிலைக்கு பதிலாக, தீ கொழுந்து விட்டு எரிகிறது. சிவனின் மாமனாரான தட்சன் யாகம் நடத்திய போது, மருமகனை அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க சென்ற மகள் தாட்சாயிணியை (பார்வதி)

அவமானப்படுத்தினான். யாகத்தை நிறுத்த தாட்சாயிணி வேள்வி குண்டத்தில் குதித்து உயிர் விட்டாள். உடனே சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார். பின், மனைவியின் உடலை சுமந்து கொண்டு தாண்டவம் ஆடினார். அப்போது, அவளது ஒவ்வொரு அங்கமும் பூலோகத்தில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அவை விழுந்த இடங்களில் சக்திகோயில்கள் எழுந்தன. அவையே சக்தி பீடங்கள் எனப்படுகின்றன. அதில் நாக்கு விழுந்த இடம் ஜ்வாலாமுகி. நாக்கில் இருந்து வெளிப்படும் மோசமான வார்த்தைகள் தீ போல சுடும். இதையே திருவள்ளுவர்,

“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு” என்கிறார்.

நாக்கு விழுந்த இடம் என்பதால், அதை நெருப்புக்கு ஒப்பிட்டு, மூலஸ்தானத்தில் நெருப்பை அம்பாளாக பிரதிஷ்டை செய்து விட்டனர். அக்பர் காலத்தில் வாழ்ந்த அபுல் பாஸல் என்பவர், தன் 'அயினி அக்பரி' நூலில், இந்தக் கோயிலின் சிறப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில், மக்கள் தங்கள் நாக்கையே இந்த அம்பாளுக்கு காணிக்கையாகக் கொடுத்ததாக சொல்லியுள்ளார். இந்தக் கோயில் கோபுரம் தங்கத்தால் ஆனது. கதவுகளுக்கு வெள்ளி தகடு பொருத்தப்பட்டுள்ளது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us