Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/வல்லபை ஐயப்பன்

வல்லபை ஐயப்பன்

வல்லபை ஐயப்பன்

வல்லபை ஐயப்பன்

ADDED : ஜன 06, 2013 04:30 PM


Google News
Latest Tamil News
சபரிமலை ஐயப்பன் கோயிலின் நிகழ்ச்சிநிரல் படி, ராமநாதபுரம் அருகிலுள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பூஜைகள் நடந்து வருகின்றன.

தல வரலாறு:





வல்லபை என்ற அரக்கி, தன் இனத்தார் அழிக்கப்பட்டது கண்டு கோபமடைந்தாள். அழிய அழிய தனது இனத்தைப் பெருக்கினாள். அவளது கோபத்தை விநாயகர் தணித்து, தன் மடியில் அமர்த்திக் கொண்டார். இதன் அடிப்படையில் இத்தல விநாயகருக்கு வல்லபை விநாயகர் என்றும், மூலவர் ஐயப்பனுக்கு வல்லபை ஐயப்பன் என்றும் பெயர் ஏற்பட்டது. ராமநாதபுரம் மன்னர், ரகுநாத சேதுபதி யாகம் நடத்திய ஊரணிக்கரையில், கோயில் அமைக்கப்பட்டது.

தல சிறப்பு:





மூலவர் முன்னால் 'தத்வமஸி' என்று எழுதப்பட்டிருக்கும். 'நீயே அது' என்று இதற்குப் பொருள். அதாவது, 'பரப்பிரம்மமே நீ தான்' என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மூலவர் சிலை பஞ்சலோகத்தில் ஒன்றரை அடி உயரமுடையது. உற்சவ மூர்த்தியும் உண்டு. தைமாதம் காலை 7 முதல் 7.30 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் முகத்தில் படும்.

திருவிழா:





இங்கு 10 நாட்கள் மண்டலபூஜை நடக்கிறது. பேட்டை துள்ளல் உண்டு. கோயிலின் பின்பக்கம் உள்ள பஸ்மக்குளத்தில் நடக்கும் ஆறாட்டின் போது, கருடன் வலம் வரும். சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி திருவிளக்கு பூஜை, ஆங்கில மாத முதல் ஞாயிறு கூட்டுப் பிரார்த்தனை, கார்த்திகை, மார்கழியில் தினமும் கணபதி ஹோமம்.

கோயில் அமைப்பு:





வல்லபை விநாயகர், வல்லபை அம்மன் (மஞ்சமாதா), வல்லபை சங்கரர், சங்கரி, வலியகடுத்த சுவாமி, கருப்பன், கருப்பி சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும் தியான மண்டபம் உள்ளன. தியான மண்டபத்தில் உற்சவ மூர்த்தியும், சிவனும் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை:





கல்வி, குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழிலில் சிறக்கவும் ஐயப்பனுக்கு விசேஷ வழிபாடு செய்யப் படுகிறது.கன்னிப் பெண்கள் மாளிகைப்புறத்தம்மனுக்கு, அபிஷேகம் செய்து, சட்டைத்துணி சாத்தி, அதையே தைத்து அணிந்து கொள்கின்றனர்.

திறக்கும் நேரம்:





காலை 5 - 10 , மாலை5- இரவு 8.

இருப்பிடம் :





ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் 9 கி.மீ. பெரிய பட்டணம் விலக்கு. அங்கிருந்து 5 கி.மீ.

போன்:





94437 24342, 04567 253 503.

- சிவா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us