Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நினைத்ததை நிறைவேற்றும் சிவன்!

நினைத்ததை நிறைவேற்றும் சிவன்!

நினைத்ததை நிறைவேற்றும் சிவன்!

நினைத்ததை நிறைவேற்றும் சிவன்!

ADDED : நவ 21, 2019 02:23 PM


Google News
Latest Tamil News
கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் நினைத்ததை நிறைவேற்றுபவர். இவரை கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தரிசிக்க நல்லது நடக்கும்.

கரன் என்னும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். மனம் மகிழ்ந்த சிவன் மூன்று லிங்கங்களைக் கொடுத்து பூஜிக்க உத்தரவிட்டார். அவற்றை வலது கையில் ஒன்றும், இடது கையில் ஒன்றும், வாயில் ஒன்றுமாக எடுத்துச் சென்றான். வலது கையில் இந்த லிங்கத்தை வியாக்ரபாத முனிவரிடம் கொடுக்க, அவர் வைக்கம் என்னும் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அதன் பலனாக கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் சிவன் காட்சியளித்து விரும்பும் வரம் தருவதாக கூறினார். இந்நாளில் இங்கு வருவோரின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றார். இந்த விழாவே வைக்கத்தஷ்டமி எனப் படுகிறது. வைக்கம் என்னும் இத்தலத்தில் மகாதேவராக சிவபெருமான் அருள் புரிகிறார். கருவறையில் 2 அடி உயர பீடத்தில் 4 அடி உயர சிவலிங்கம் உள்ளது. இங்கு அம்மனுக்கு சிலை கிடையாது. கோயில் பின்புறம் உள்ள விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், பார்வதியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் அதிகாலை 4:00 முதல் 8:00 மணி வரை வழிபடுங்கள். இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்தார். இந்நாளில் லிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடத்தப்படும். சூரபத்மன், தாரகாசுரனை வதம் செய்து முருகன் வெற்றி பெற, வைக்கத்தஷ்டமியன்று சிவனே இங்கு அன்னதானம் செய்தார். இங்கு அன்னதானம் செய்தால் நினைத்தது நிறைவேறும். அன்னதானத்தில் சிவன், பார்வதி பங்கேற்பதாக ஐதீகம்.

கார்த்திகை அஷ்டமியை ஒட்டி திருவிழா 13 நாள் நடக்கிறது.

அம்மன் சன்னதி இல்லாவிட்டாலும், 12 ஆண்டுக்கு ஒருமுறை 12 நாள் தொடர்ந்து தேவி வழிபாடு செய்யப்படுகிறது. அசுரன் கரன், தன் இடது கையில் வைத்த லிங்கத்தை ஏற்றமானுார் என்ற ஊரில் மேற்கு நோக்கியும், வாயில் இருந்த லிங்கத்தை கடித்துருத்தி என்ற ஊரில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

எப்படி செல்வது

* எர்ணாகுளத்திலிருந்து 34 கி.மீ.,

* கோட்டயத்திலிருந்து 42 கி.மீ.,

விசேஷ நாட்கள்

வைக்கத்தஷ்டமி, மகாசிவராத்திரி

நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு : 04829 - 225 812

அருகிலுள்ள தலம்: கடுத்துருத்தி சிவன் கோயில்(17 கி.மீ.,) ; ஏற்றமானுவர் சிவன் கோயில் (29 கி.மீ.,)

-லோசனன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us