ADDED : செப் 17, 2012 10:28 AM

அகில இந்திய அளவில் விநாயகர் கோயிலின் விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இது. விநாயகர் கோயில்களில் வேறு எங்குமே இல்லாத வகையில் பள்ளியறையும் இங்குள்ளது. தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். பள்ளியறைக்கு பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. விநாயகருக்கு இத்தலத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. சித்தி புத்தி அம்மைகள் துணைவியராக உள்ளனர். மூலவரான மணக்குளத்து விநாயகரின் பீடம், கிணறு அல்லது குளத்தின் மீது இருப்பதாகச் சொல்கின்றனர். பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 - 1, மாலை 4 - இரவு 10.
போன் :
0413-233 6544.