கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்
கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்
கும்பகோணம் கரும்பாயிரம் பிள்ளையார்
ADDED : செப் 17, 2012 10:27 AM

வணிகர் ஒருவர் மாட்டு வண்டியில் கரும்புக்கட்டு ஏற்றி வந்தார். அவரிடம் சிறுவன் உருவில் வந்த விநாயகர் கரும்பு கேட்டார். வணிகர் தர மறுத்தார். எனவே கரும்புகளை நாணல் குச்சிகளாக மாற்றி திருவிளையாடல் புரிந்தார். கலங்கி நின்ற வணிகரிடம் தர்மசிந்தனை பற்றி அறிவுறுத்தினார். வணிகர் விநாயகரிடம் மன்னிப்புக்கேட்டார். பின் நாணல் குச்சிகளை மறுபடியும் கரும்பாக மாற்றி அதிசயம் நிகழ்த்தினார். இதன் காரணமாக இவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையான இவர் பக்தர்களின் வாழ்வை இனிப்பாக மாற்றிடுவார்.
இருப்பிடம்:
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் அருகில்.
திறக்கும் நேரம்:
காலை 5 - 10 , மாலை 3 - இரவு மணி 7.