Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சுகமாக வாழ...

சுகமாக வாழ...

சுகமாக வாழ...

சுகமாக வாழ...

ADDED : டிச 26, 2019 02:50 PM


Google News
Latest Tamil News
டிச.30 ரமணர் பிறந்த நாள்

* எண்ணம், சொல், செயலால் கடவுளைச் சிந்திப்பவன் சுகமாக வாழ்வான்.

* நல்லவர்களின் நட்பை நாடினால் மனதிலுள்ள அறியாமை நீங்கும்.

* கடவுளின் கையிலுள்ள கருவி என்ற உண்மையை நாம் உணர்ந்தால் ஆணவம் மறையும்.

* கடவுளிடம் சரணடைந்தால் வாழ்வு நலமாக அமையும்.

* கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது. மனத்துாய்மை ஒன்றையே அவர் விரும்புகிறார்.

* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக இல்லாமல் இதயத்தில் இருந்து வர வேண்டும்.

* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை தியானத்தின் மூலம் வசப்படுத்த முடியும்.

* விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும்.

* நான் யார் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேயிரு வழி புலப்படும்.

* பொறுமை இருந்தால் மட்டுமே மனக்கட்டுப்பாடு சாத்தியம்.

* எல்லா இடங்களிலும், செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது.

* பக்தியின் உயர்ந்த நிலை மவுனம்.

* கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரைச் சரணாகதி அடைய தகுதியானவன்.

வழிகாட்டுகிறார் ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us