ADDED : பிப் 05, 2013 01:52 PM

நியாயம் உங்கள் பக்கம் இருந்தும் ஜவ்வு போல வழக்கு இழுத்தடிக்கிறதா? கவலை வேண்டாம். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரரை வழிபட்டால் போதும். நியாயத்தை நிலைநாட்டி விரைவில் தீர்ப்பளிப்பார்.
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இடையே சத் என்றால் என்ன? அசத் என்றால் என்ன என்பது பற்றிய விவாதம் எழுந்தது. 'சத்' என்பது உண்மைப் பொருள். 'அசத்' என்பது பொய்யான மாயை. 'சத்'திலிருந்து 'அசத்' தோன்றியது என்று சிலரும், அசத்திலிருந்து 'சத்' தோன்றியது என்று சிலரும் வாதிட்டனர். இது விஷயத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டானது. இதற்குரிய சரியான தீர்ப்பு வேண்டி காஞ்சிபுரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிவ பெருமான் நேரில் தோன்றி 'சத்' என்பதே உயர்ந்தது. அதிலிருந்தே மற்றவை தோன்றின என்று தீர்ப்பு வழங்கினார். வழக்கிற்கு முடிவு கட்டியதால், தேவர்கள் வணங்கிய சிவலிங்கத்திற்கு 'வழக்கறுத்தீஸ்வரர்' என்ற பெயர் வந்தது. அந்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
கருவறையில் ÷க்ஷõடச லிங்கமாக (16 பட்டை கொண்ட லிங்கம்) வழக்கறுத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவரை 16 வாரம் விளக்கேற்றி வழிபட்டால், நீண்டகாலம் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிவஞான முனிவர் எழுதிய காஞ்சிபுராணத்தில், 'வழக்கு அனைத்தும் நடுவாய் நின்று அறுக்கும் ஓர்கல்' என்று இவர் பற்றிய குறிப்பு உள்ளது. இங்குள்ள அம்பிகை மருவார்குழலி. காமிக ஆகம அடிப்படையில் தினமும் இருகால பூஜை நடக்கிறது.
பராசரர், தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே, சுதாசன் என்னும் அசுரன் அவருடைய தந்தை சத்தி முனிவரைக் கொன்று விழுங்கினான். தந்தையின் இறப்புக்கு காரணமான அசுர குலத்தை அழிக்க பராசரர் சிவபூஜை செய்தார். தனது தாத்தா வசிஷ்டரின் வழிகாட்டுதல்படி, காஞ்சி வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். சிவனருளால் அசுரர்களை அழித்ததோடு, தன் தந்தை சத்திமுனிவரையும் காணும் பேறு பெற்றார். வழக்கறுத்தீஸ்வரரின் வலதுபக்கம் பராசரர் வழிபட்ட சிவன் 'பராசரேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் சந்நிதிகளும் <உள்ளன. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் இக்கோயிலில் நீண்ட காலம் ஆன்மிக உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
திருவிழா: ஆருத்ரா தரிசனம், மாணிக்கவாசகர் திருவிழா, கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, நவராத்திரி.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., காந்திசாலை மூங்கில் மண்டபம் அருகில்.
காலை 6.30-மதியம்12.30, மாலை4- இரவு 7.30
80122 48703.
சி.வெங்கடேஸ்வரன்
தலவரலாறு:

16 வார விளக்கு:

பராசரர் பூஜித்த சிவன்:

பரிவார சந்நிதிகள்:
விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன் சந்நிதிகளும் <உள்ளன. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் இக்கோயிலில் நீண்ட காலம் ஆன்மிக உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
திருவிழா: ஆருத்ரா தரிசனம், மாணிக்கவாசகர் திருவிழா, கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, நவராத்திரி.
இருப்பிடம்:
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., காந்திசாலை மூங்கில் மண்டபம் அருகில்.
திறக்கும்நேரம்:
காலை 6.30-மதியம்12.30, மாலை4- இரவு 7.30
போன்:
80122 48703.
சி.வெங்கடேஸ்வரன்