Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நாடு ஆள ஆசையா...

நாடு ஆள ஆசையா...

நாடு ஆள ஆசையா...

நாடு ஆள ஆசையா...

ADDED : ஏப் 12, 2024 03:12 PM


Google News
Latest Tamil News
நாட்டை ஆளவும், நல்லவர் நட்பை பெறவும் கேரள எல்லையிலுள்ள சிவபுரம் என்னும் அழிக்கால் ஆதிசிவபெருமான் கோயிலை தரிசியுங்கள்.

கேரளாவை ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவர் சேரமான் நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் இவர். உடலில் உவர் மண் படிந்தபடி துணி வெளுப்பவர் ஒருவர் வருவதைக் கண்டு இவர் வணங்கினார். மன்னர் வணங்குகிறாரே என அவர் பயந்தார். 'பயப்படாதீர்கள். உங்களின் உடலிலுள்ள உவர் மண் பார்ப்பதற்கு, சிவனின் அடையாளமான திருநீற்றை நினைவுபடுத்துகிறது. நன்றி' என பொற்காசுகளை அளித்தார்.

அரண்மனையில் உள்ள பூஜையறையில் மன்னரின் வழிபாட்டை ஏற்கும் விதமாக தினமும் சிவனின் பாதச் சிலம்புகள் ஒலி எழுப்பும். ஒருநாள் அவ்வோசை கேட்கவில்லை. வருந்திய மன்னர் காரணம் கேட்ட போது, 'நம் அடியவர் ஆரூர் சுந்தரரின் பாடலை ரசித்துக் கொண்டிருந்ததால் மெய் மறந்தேன்' என்றார் சிவன்.

இதன்பின் சேரமான் பெருமானும் அடியவரான சுந்தரருடன் நட்பு கொண்டார். இருவரும் பல சிவத்தலங்களைச் தரிசித்து மகிழ்ந்தனர்.

இந்த மன்னர் பூஜித்த சிவலிங்கத் திருமேனியே இக்கோயிலின் கருவறையில் உள்ளது. சுயம்பு மூர்த்தியான இவரது திருநாமம் அழிக்கால் ஆதிசிவன்.

இங்குள்ள அம்மனின் திருநாமம் மனோன்மணி. சமீபத்தில் திருப்பணி நடத்த உத்தரவு கேட்ட போது மன்னர் சேரமான் நாயனார் பூஜித்த சிவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. 71 அடி உயர ராஜகோபுரம் திருப்பணி செய்யப்பட்டு 2021ல் கும்பாபிஷேகம் நடந்தது.

சுவாமிக்கு வில்வ மாலை சாத்தி வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். பிரதோஷம், திருவாதிரை, ஆடி சுவாதியன்று சிறப்பு பூஜை நடக்கும்.

எப்படி செல்வது: களியக்காவிளை சந்திப்பில் இருந்து குன்னம்விளாகம் சாலையில் 5 கி.மீ.,

விசேஷ நாள் : ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி.

நேரம்: காலை 6:00 - 9:00 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 97876 34099, 82481 24595

அருகிலுள்ள தலம்: மலையடி மகாதேவர் கோயில் 4 கி.மீ.,(நினைத்தது நடக்க...)

நேரம்: காலை 9:00 - 10:30 மணி; மாலை 6:00 - 7:00 மணி

தொடர்புக்கு: 87603 23792





      Our Apps Available On




      Dinamalar

      Follow us