ADDED : டிச 22, 2023 05:25 PM

சிவனடியார்களான நாயன்மார்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக நெய்வேலி திருத்தொண்டர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள மூலவர் நடராஜர் காண்போரை கவரும் விதத்தில் உள்ளது. திருத்தொண்டர் கோயில் என பெயர் இருந்தாலும் நடராஜர் கோயில் என்றே அழைக்கின்றனர். இங்கு சுவாமிக்கு பளிங்கு சபை நடராஜர் என்றும் பெயருண்டு.
மூலவர் நடராஜரின் சிலை ஐம்பொன்னாலானது. இதன் உயரம் 10 அடி, 2 ஆயிரத்து 420 கிலோ.அருகிலுள்ள சிவகாமி அம்மன் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது. இவருக்கு 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்று சிறப்பு பெயர் உண்டு. நடராஜரின் நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி 'ஓசை கொடுத்த நாயகி' என அழைக்கப்படுகிறாள்.
தன்னை விட தன் அடியார்களை வழிபடுவதில் தான் சிவபெருமானுக்கு விருப்பம் அதிகம். அதனால் சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார் சன்னதி இங்கு பிரதானமாக உள்ளது. பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்திற்குரிய நாயன்மாரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.
விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார், தொகையடியார் சன்னதிகளும் உள்ளன. இங்குள்ள செம்பொற்சோதிநாதர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்கை, தென்முகக்கடவுள், துர்கை, முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ஏழு குதிரை பூட்டிய வட்டவடிவத் தேரில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத் திசைகளை பார்த்த நிலையில் தவக்கோலத்தில் உள்ளனர். இங்குள்ள சபை பளிங்கு கற்களால் ஆனதால் பளிங்கு சபை எனப்படுகிறது.
கோயில் நுழைவுவாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மனுக்கள் காலை பூஜையின் போது அர்ச்சகரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்படும். விருப்பம் நிறைவேறியதும் நன்றிக் கடிதத்தை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
எப்படி செல்வது : நெய்வேலி டவுன்ஷிப் பஸ் ஸ்டாண்ட் அருகில்
விசேஷ நாள்: திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம், நாயன்மார் குருபூஜை நாட்கள்
நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 மணி மாலை 4:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94438 43912
அருகிலுள்ள தலம்: வடலுார் சத்தியஞான சபை (10 கி.மீ.,)
(அன்பாய் திகழ...)
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 04142 - 259 250