Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/திருப்பம் தரும் திருப்பாம்புரம்

திருப்பம் தரும் திருப்பாம்புரம்

திருப்பம் தரும் திருப்பாம்புரம்

திருப்பம் தரும் திருப்பாம்புரம்

ADDED : ஏப் 17, 2025 12:31 PM


Google News
Latest Tamil News
நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் ஏப்.26, 2025 அன்று பெயர்ச்சியாகின்றனர். இதையொட்டி திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் பாம்புரநாதரை தரிசிப்போம். ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீன ராசியினர் இங்கு தரிசனம் செய்ய வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.

கைலாயத்தில் சிவனை வணங்கினார் விநாயகர். அப்போது சிவனின் கழுத்தில் இருந்த பாம்பு ஆணவத்துடன், 'நான் பலசாலி என்பதால் தான் முதல் கடவுளான விநாயகரும் என்னை வணங்குகிறார்' என கருதியது. இதை அறிந்த சிவன் கோபத்துடன் நாக இனத்தையே சபித்தார்.

உலகைத் தாங்கும் நாக இனத்தின் தலைவனான ஆதிசேஷனும், நிழல் கிரகங்களான ராகு, கேது உள்பட அனைத்து நாகங்களும் சக்தியை இழந்தன. அதைக் கண்டு மனம் இரங்கிய சிவன், 'பூலோகத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் மகாசிவராத்திரியன்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்' என வழிகாட்டினார். அதன்படி ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்களும், ராகு, கேதுவும் மகாசிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இங்கு வந்து வழிபட்டு இழந்த பலத்தை பெற்றனர்.

பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்காதேவி, சூரியன், சந்திரன், கோச்செங்கச் சோழன் ஆகியோரும் இங்கு வழிபட்டுள்ளனர். ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. மூலவர் பாம்புரநாதர் கிழக்கு நோக்கி நாக ஆபரணம் சாத்தப்பட்டு காட்சி தருகிறார். வண்டுசேர்குழலி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.

ஞாயிறன்று ராகுகாலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) அர்ச்சனை செய்தால் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம். கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது திசை நடப்பவர்கள், கடனால் அவதிப்படுபவர்கள் இங்கு பரிகார பூஜை செய்கின்றனர். ராகு, கேது தோஷம் தீர நாகர் சிலைகளை வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்கின்றனர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் இங்கு பதிகம் பாடியுள்ளனர்.

எப்படி செல்வது: மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளத்தில் இருந்து 7கி.மீ.,

விசேஷ நாள்: ராகு, கேது பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ராகு காலம்.

நேரம்: காலை 7:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 87547 56418

அருகிலுள்ள கோயில்: செதிலபதி முக்தீஸ்வரர் 11 கி.மீ., (பித்ரு தோஷம் தீர...)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94427 14055





      Our Apps Available On




      Dinamalar

      Follow us