Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/காட்மாண்டு பசுபதிநாதர்

காட்மாண்டு பசுபதிநாதர்

காட்மாண்டு பசுபதிநாதர்

காட்மாண்டு பசுபதிநாதர்

ADDED : ஏப் 17, 2025 12:05 PM


Google News
Latest Tamil News
நெற்றிக்கண்ணுடன் சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். ஆனால் ஐந்து முகங்கள் கொண்டவர் அவர் என்பது தெரியுமா... நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் இவருக்கு கோயில் உள்ளது. பசுபதிநாதர் எனப்படும் இவர் உலக இயக்கத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

பசுக்கள் என்றால் உயிர்கள். இந்த உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் எஜமானராக இருப்பவர் சிவன். இதனால் அவருக்கு 'பசுபதி' என பெயருண்டு. திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களுடன், மேல் நோக்கிய ஒரு முகத்தையும் சேர்த்து ஐந்துமுகம் கொண்டவர் இவர். நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த மன்னர் சுபஸ்பதேவர் என்பவர் 464ல் பசுபதிநாதர் கோயிலைக் கட்டினார். பகோடா கட்டடக்கலையால் ஆன இக்கோயில் கனசதுர வடிவம் கொண்டது.

கோயில் முழுவதும் தாமிர கூரையுடன் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நான்கு முதன்மை வாயில்களும் வெள்ளியால் ஆனவை. மூலவர் பசுபதிநாதர் ஆறடி உயரம், ஆறடி சுற்றளவு கொண்ட கருங்கல்லால் ஆனவர். சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் பண்டாக்கள் எனப்படும் பூஜாரிகள் இருக்கின்றனர். கோயில் எங்கும் பக்தர்கள் அமர்ந்து ருத்ரஜபம் செய்கின்றனர். சிவன் எதிரில் பித்தளையால் ஆன பெரிய நந்தி சிலை உள்ளது.

பசுபதிநாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை சுற்றி வருவதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் பாசுமதி நதி ஓடுகிறது. இதில் நீராட படித்துறைகள் உள்ளன. அதில் ஆர்ய காட் படித்துறையில் இறந்தவர்களின் உடலை தீயிட்டு எரித்து அஸ்தியை ஆற்றில் கரைக்கின்றனர். கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டம் போல முன்னோர் சடங்குகள் இங்கு நடக்கிறது. யுனெஸ்கோவின்

உலகப் பாரம்பரிய சின்னங்களில் இக்கோயிலும் ஒன்று. பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் புத்தநீலகண்ட் என்னும் விஷ்ணு கோயில் உள்ளது. ஆதிசேஷன் மீது சங்கு சக்கரம் தாங்கியபடி சயனக் கோலத்தில் இருக்கிறார். விவசாயி ஒருவரின் கனவில் விஷ்ணு தோன்றி சிலைவடிவில் புதைந்து கிடப்பதாகவும், அதை பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டதால் கோயில் கட்டப்பட்டது.

எப்படி செல்வது:

காட்மாண்டுவுக்கு பெங்களூரு, டில்லியிலிருந்து விமானம் உள்ளது.

பெங்களூருவில் இருந்து 2355 கி.மீ.,

விசேஷ நாள்: மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி, ரக் ஷாபந்தன், மாத பவுர்ணமி.

நேரம்: அதிகாலை 4:00 - இரவு 7:00 மணி

தொடர்புக்கு: +9771 - 447 0340

அருகிலுள்ள கோயில்: குகேஸ்வரி கோயில் 1 கி.மீ.,(நினைத்தது நடக்க...)

நேரம்: காலை 7:30 - இரவு 7:30 மணி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us