ADDED : நவ 19, 2012 12:30 PM

இழந்த வேலை, பதவியை மீண்டும் பெற, ராமபிரானால் வழிபடப்பட்ட ராமநாதரை காஞ்சிபுரத்தில் தரிசிக்கலாம். தமிழகத்தின் வடக்கு ராமேஸ்வரமாக இது கருதப்படுகிறது.
தசரத குமாரரான ராமர் வனவாசம் சென்ற காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் உதவியுடன் ராமர் சேதுக்கரையில் கடலில் பாலம் அமைத்து இலங்கை சென்றார். ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். சிவபக்தனான ராவணனைக் கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. அதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்தார். அப்போது காட்சி அளித்த சிவன், மோட்சபுரிகளில் ஒன்றான காஞ்சியிலும் தன்னை வணங்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, ராமர் காஞ்சிபுரத்தில் வழிபட்ட தலம் இது. ராமரின் பெயரால் சுவாமிக்கு 'ராமநாதர்' என்று பெயர் வந்தது. இவரை தேவர்கள், பூதகணங்கள் மட்டுமின்றி, மிருகங்கள், பறவைகள், ஊர்வன போன்ற உயிர்களும் வணங்கி முக்திபெற்றனர். ராமேஸ்வரத்திற்குரிய புனிதமும் பெருமையும் இத்தலத்திற்கும் உண்டு. இங்குள்ள முக்தி மண்டபம் சிறப்பு மிக்கது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலில் சிவன் வழிபட்ட வல்லபகணபதி வீற்றிருக்கிறார். முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்பே எச்செயலையும் தொடங்கவேண்டும் என்னும் நியதியை ஏற்படுத்திய சிவனே, ஒருமுறை அதைப் பின்பற்றவில்லை. திரிபுரசம்ஹாரத்தின் போது சிவன், விநாயகரை தியானிக்கா மல், தேரில் புறப்பட்டார். இதைக் கண்டவிநாயகர், தேரின் அச்சினை முறியச் செய்து தடுத்தார். தன் தவறுக்காக வருந்திய சிவன், இந்த விநாயகரை வழிபட்டார். அவரே வல்லபகணபதியாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இப்பெருமான் செங்கதிர் நிறமும், சர்ப்ப ஆபரணமும், மகுடம், கேயூரம் ஆகிய அணிகலன்களும், பத்து கைகளுடனும், பழம், கரும்பு, நெற் கதிர், தந்தம் ஏந்தியும் காட்சியளிக்கிறார். வேலையில்லாதவர்களும், வேலை, பதவியை இழந்தவர்களும் நிவாரணம் பெற இவரை வணங்குகின்றனர். பிரதோஷம், பவுர்ணமி, சதுர்த்தி தினங்களில் இந்த வழிபாடு விசேஷம்.
இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதில மடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
காலை 6 -11, மாலை 5- இரவு8.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., ஏகாம்பரநாதர் கோயில் முன்பு.
99942 93391.
- சி. வெங்கடேஸ்வரன், சிவகங்கை.
தல வரலாறு:

கல்வி கணபதி:

காஞ்சிப்பெரியவர் வருகை:
இங்குள்ள முக்தி மண்டபத்திற்கு காஞ்சிப்பெரியவர் பலமுறை வருகை தந்துள்ளார். இங்கிருந்து சீடர்களுக்கு வேதம் கற்பித்திருக்கிறார். சிதில மடைந்திருந்த இக்கோயில் பெரியவரின் அருளாசியின்படி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சிகாமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
திறக்கும்நேரம்:
காலை 6 -11, மாலை 5- இரவு8.
இருப்பிடம்:

போன்:
99942 93391.
- சி. வெங்கடேஸ்வரன், சிவகங்கை.