Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சுகம் தரும் துண்டு!

சுகம் தரும் துண்டு!

சுகம் தரும் துண்டு!

சுகம் தரும் துண்டு!

ADDED : டிச 17, 2012 03:02 PM


Google News
Latest Tamil News
காலையில் எழுந்ததும் 'ஹரிஹரி என்று ஏழுமுறையும், பணிக்கு கிளம்பும்போதோ, சமையலைத் துவங்கும் முன்போ 'கேசவா' என்று ஏழுமுறையும் யார் சொல்கிறார்களோ, அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செயல்பாடுகள் வெற்றிகரமாகும் என்பது ஐதீகம். இந்த இரு திருநாமங்களையும் இணைத்து தேனி மாவட்டத்தில் 'ஹரிகேசவநல்லூர்' என்ற ஒரு ஊர் இருந்தது. அதுதான், தற்போது சின்னமனூர் ஆக மாறியுள்ளது. இந்த ஊரில் அருளும் லட்சுமி நாராயணர் கோயிலில் பிரசாதமாகத் தரும் துண்டை விரித்துப் படுத்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:





பெருமாள் பக்தர்கள் சிலர், ரங்கநாதர் அமைப்பில் சிலை வடித்து பெருமாளுக்கு கோயில் எழுப்பினர். அந்நியர் படையெடுப்பின்போது கோயில் சேதமடைந்தது. பின்பு இப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டனர். அப்போது மன்னர் கனவில் தோன்றிய பெருமாள், தனது இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின்பு இங்கு குருவாயூரப்பன் அமைப்பில் சுவாமிக்கு சிலை வடித்த மன்னர், தாயார்களுடன் பிரதிஷ்டை செய்தார். குருவாயூரில் சின்னக்கண்ணனாக தனித்து காட்சி தரும் பெருமாள் இங்கு, தாயார்களுடன் காட்சி தருவது விசேஷம். ஆனாலும், சுவாமியின் மார்பிலுள்ள மகாலட்சுமியே பிரதான தாயாராக கருதப்படுவதால், சுவாமிக்கு லட்சுமி நாராயணர் என்ற பெயர் அமைந்துவிட்டது. இவரை வணங்குவோருக்கு செல்வவளம் பெருகும்.

பெருமாளுடன் ஆஞ்சநேயர்:





கருவறையில் லட்சுமிநாராயணர், நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியு டன் காட்சி தருகிறார். அருகில் ஆஞ்சநேயர் உள்ளார். இவர் சுவாமியின் பாதத்தைவிட, உயரம் குறைவானவராக காட்சி தருவது விசேஷம்.

கம்பு பிரார்த்தனை:





தீராத நோயால் அவதிப்படுபவர்கள், தங்கள் பிறந்த நட்சத்திர நாளில், சுவாமிக்கு துண்டு (வஸ்திரம்) கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த துண்டை, சுவாமி மடியில் வைத்து திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்கின்றனர். ஈரத்துண்டை, பக்தர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். இதை வீட்டில் விரித்து படுத்தால், நோய் நிவர்த்தியாகும் என்கிறார்கள். திருமஞ்சனம் செய்ய கட்டணம் உண்டு. விவசாய நிலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, காவலுக்கு கொண்டு செல்லும் கம்புகளை சுவாமியிடம் வைத்து, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

சிறப்பம்சம்:





சுரபிநதியின் கரையில் அமைந்த கோயில். சுவாமி குருவாயூர் அமைப்பில் காட்சி தருவதால், இங்கும் சந்தனப் பிரசாதம் தருகிறார்கள். திருமணத்தடை உள்ள பெண்கள் பெருமாளுக்கும், ஆண்கள் ஸ்ரீதேவிக்கும் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். நிலம் தொடர்பான பிரச்னை நீங்க, பூமாதேவிக்கு செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரை நேரத்தில் குங்கும அர்ச்சனை செய்து, அதை தங்களது நிலத்தில் தூவுகிறார்கள்.

இருப்பிடம்:





தேனியிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் சின்னமனூர். காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் கோயில்.

திறக்கும் நேரம்:





காலை 7.30- 10.30, மாலை 5- இரவு 8.

போன்:





04554 247 486, 247 134.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us