ADDED : ஜன 31, 2023 10:44 AM

காஞ்சி மஹாபெரியவரைத் தரிசிக்க பக்தர் ஒருவர் மகளுடன் மடத்திற்கு வந்தார். அவரது மகளுக்கு சரிவர காது கேட்கவில்லை என சுவாமிகளிடம் வருந்தினார். அதற்கு ''தினமும் குளித்ததும் புரச மரத்தின் கொழுந்து இலைகளில் சாறு பிழிந்து 10 சொட்டு காதில் விட்டால் பிரச்னை தீரும். மூன்று மாதம் இதைச் செய்யுங்கள்'' என குங்குமம் கொடுத்து ஆசியளித்தார். அவர்களும் அப்படியே செய்ய பிரச்னையும் தீர்ந்தது.
மறுமுறை வந்த போது, 'தற்போது என் மகளுக்கு காது நன்கு கேட்கிறது' என்பதைச் சொல்லி மகிழ்ந்தார் பக்தர்.
இதைப் போலவே வேறொரு பக்தர் மகனுடன் வந்தார். வணங்கி எழுந்த அவர், திக்குவாயால் மகன் சிரமப்படுவதாகச் சொல்லி கவலைப்பட்டார். ''தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் வேப்ப விதையை தேன் விட்டு அரைத்து அடிநாக்கில் தடவு. ஒரு வருடத்திற்கு செய்'' என ஆசியளித்தார். அப்படியே செய்த போது சிறுவன் இயல்பாகப் பேசத் தொடங்கினான். மகிழ்ச்சியுடன் வந்த பக்தர், மகனை வேதபாட சாலையில் சேர்க்க போவதாக தெரிவித்தார். மஹாபெரியவரும் ஆசியளித்தார். சிறுவனும் வேதம் கற்று பண்டிதரானான்.
மஹாபெரியவரின் 'ஜீவாத்ம கைங்கர்யம்' என்னும் திட்டத்தின்படி வெங்கட்ராம அய்யர் என்னும் பக்தர் ஞாயிறு தோறும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு பிரசாதம் கொடுத்து நலம் பெற பிரார்த்திப்பார். ஒருமுறை ஜெர்மானியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்த இடத்தில் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கும் பிரசாதம் அளித்து பிரார்த்தித்தார் பக்தர். அன்றிரவு ஜெர்மானியரின் கனவில் மஹாபெரியவர் ஆசியளித்தார்.
அதன்பின் உடல்நிலை சீராகத் தொடங்கியது. மறுவாரம் ஞாயிறன்று பக்தரை சந்திக்க காத்திருந்த ஜெர்மானியர் நடந்ததை தெரிவித்ததோடு, மஹாபெரியவரின் பரம பக்தராகவும் மாறினார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் சினிமா பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com