மாண்டவ்ய என்னும் முனிவர் தர்ம சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர். சத்தியத்திலும் தவத்திலும் உறுதி மிக்கவர். ஆசிரமத்தின் முன்பு உலக நன்மைக்காக மவுனவிரதத்தில் ஈடுபட்டார். அந்த சமயம் அரண்மனையிலுள்ள நகைகளை திருடிய திருடர்கள் அவரது குடிலுக்கு அருகில் மறைத்து வைத்து விட்டு சென்றனர்.
திருடர்களை தேடி வந்த காவலர்கள் நகைளை கைப்பற்றி முனிவருக்கும் திருடர்களும் தொடர்பு இருக்கும் என நினைத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். எதுவும் பேசாமல் இருந்த முனிவரிடம் விசாரித்த மன்னர் அவரை கழுவில் ஏற்றுங்கள் என தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேற்றிய போது கண் விழித்த முனிவருக்கு நடந்தது எல்லாம் விளங்கியது. தவவலிமையால் அதை பொறுத்துக் கொண்ட அவர் தனது உடலில் குத்தப்பட்ட கட்டையுடன் எமதர்மரிடம் சென்று காரணம் கேட்டார். அதற்கு அவரோ முற்பிறவியில் பறவைகளை சிறு சிறு குச்சி கொண்டு துன்புறுத்தி இன்பம் அடைந்தீர் அச்செயலே இதற்கு காரணம் என்றார்.
முற்பிறவியில் தெரியாமல் செய்த தவறுக்கு முதுமையான என்னை இவ்வாறு தண்டிப்பதா என கோபப்பட்டார் . நியாயமற்ற உமது செயலால் நான் மனவேதனை அடைந்து துன்பப்படுவதைப் போல நீயும் பூவுலகில் பிறப்பெடுத்து துன்பப்படுவாய் என சாபமிட்டார் முனிவர்.
சாபத்தின்படி மகாபாரதத்தில் துாது வந்த கிருஷ்ணபகவானை வரவேற்று திருவமுது படைக்கும் விதுரராக எமதர்மர் பிறந்தார். தர்மம், ராஜநீதி சாஸ்திரத்திலும் தேர்ச்சி பெற்றவர் விதுரர்.
கோபமும் ஆசையும் இல்லாதவர். எதையும் தீர்க்கமாக ஆராய்பவர். சத்தியத்தின் வடிவம் விதுரர் என இவரைப் பற்றி வியாசர் புகழ்ந்துள்ளார். அறிவு என்னும் புத்தியை கொண்டு நன்மை, தீமை என்கிற இரண்டையும் ஆராய்ந்து எதிரி, நண்பன், புறக்கணிக்கப் பட்டவன் என்ற மூவரையும் கண்டு கொள்ள வேண்டும் என்பது இவருடைய புகழ் பெற்ற உபதேசமாகும்.