ADDED : ஜூலை 12, 2024 08:01 AM

ஆந்திராவில் உள்ள பத்ராசலம் ராமர் கோயிலை 16ம் நுாற்றாண்டில் கட்டியவர் ராமதாசர். இக்கோயில் சிதிலமடையவே காஞ்சி மஹாபெரியவர் காலத்தில் எஸ்.எம்.கணபதி ஸ்தபதியால் மீண்டும் கட்டப்பட்டது.
திருப்பணியின் போது பத்ராசலத்திற்கு சுவாமிகள் வந்தார்.
வந்ததும் முதல் வேலையாக கோதாவரி நதியில் நீராட விரும்பினார். இதை அறிந்த ஸ்தபதி உற்சாகமானார். காரணம் மகான் மீது பட்ட புனிதநீர் தன் மீதும் படும் என்ற மகிழ்ச்சி தான்!
நீராடிய பின்னர் ஸ்தபதியால் கட்டப்பட்ட மண்டபத்தைப் பார்த்தார் மஹாபெரியவர். மகான் ரசிக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் ஒவ்வொரு சிற்பமாக விளக்கியபடி வந்தார் ஸ்தபதி. மஹாபெரியவர் குறிப்பிட்ட சிற்பத்தைக் காட்டி 'இது என்ன?' எனக் கேட்டார்.
'பிரம்மா' என்றார் ஸ்தபதி.
'பக்கத்தில் இருக்கும் இருவர்?'
'சரஸ்வதியும், சாவித்திரியும்' என்றார் ஸ்தபதி.
புன்னகைத்தபடியே ஆசியளித்தார்.
வீட்டிற்கு வந்ததும் அவரது மனைவி, 'உங்களோட கழுத்தில இருக்கிற நவரத்தின மாலை எங்கே'' எனக் கேட்டாள்.
கோதாவரியில் நீராடும் போது வெள்ளத்தில் போய் விட்டதோ... என்றார் ஸ்தபதி.
'யாரையாவது அனுப்பி தேடச் சொல்லுங்கள்' என்றாள் மனைவி.
வெள்ளத்தில் போன மாலை எப்படி கிடைக்கும்? என எண்ணியபடியே பணியாளரை அனுப்பினார். ஸ்தபதி நீராடிய இடத்தில் பணியாளர் தேடிய போது என்ன ஆச்சரியம்... கையில் சிக்கியது மாலை.
ஸ்தபதியிடம் கொடுத்த போது ஆனந்தக் கண்ணீரால் மாலை தெளிவாக தெரியவில்லை. அது தன்னுடையது தானா எனக் கூர்ந்து பார்த்தார். அது அவருடையது தான்.
'மாலை மீண்டும் கிடைக்க காரணம் காஞ்சி மஹாபெரியவரின் அருள் அன்றி வேறென்ன?' என நெகிழ்ந்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com