Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

ADDED : பிப் 19, 2023 01:24 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரத்தை பல்லவ மன்னர் ஆட்சி செய்த காலம் அது. அப்போது திருமழிசையாழ்வாருடைய சீடரான கணிகண்ணன் தினமும் அரண்மனைக்கு செல்வது வழக்கம். ஒருநாள் கணிகண்ணனிடம், 'தெய்வத்துக்குச் சமமான தன் மீது கவிதை பாடும்படி' பணித்தார் மன்னர். அவரோ பெருமாளை பற்றி பாடினார்.

''தன்னைப் பற்றிப் பாடாமல், கோயிலில் படுத்திருக்கும் பெருமாளை பாடுகிறீரே'' என கோபப்பட்டார்.

அதற்கு அவர், ''நீங்கள் தானே மன்னனும், பெருமாளும் ஒன்று என கூறினீர்கள். அதனால் அவரைப் பாடினால் என்ன? உங்களைப் பாடினால் என்ன? இரண்டும் ஒன்றுதானே'' என சொன்னார்.

காஞ்சிபுரத்தை விட்டு வெளியே போகும்படி உத்தரவிட்டார் மன்னர். இதை தன் குருவான திருமழிசையாழ்வாரிடம் கூறி, நகரை விட்டு கிளம்புவதாக கூறினார் கணிகண்ணன்.

உடனே 'நானும் வருவேன்' என சொன்னதோடு மட்டுமல்லாமல், தான் தங்கியிருந்த கோயிலுக்கு சென்றார் திருமழிசையாழ்வார். அங்கே பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை நோக்கி, 'கச்சி மணிவண்ணா, இவ்வூரை விட்டு கணிகண்ணன் செல்கிறான். செந்நாப் புலவனான நானும் செல்கிறேன். நீ இங்கு படுத்திருக்க வேண்டாம். நீயும் பாம்புப் படுக்கையான உன் பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பு' என வேண்டினார். அவ்வளவுதான்! பெருமாளும் துள்ளியெழுந்து அவருடன் புறப்பட்டார். பிறகு என்ன அந்த ஊரே களையிழந்தது. மன்னரின் மனம் கலங்கியது. நடந்த விஷயத்தை அறிந்தவர், தன் தவறை உணர்ந்தார். பின் கணிகண்ணர் தங்கியிருக்கும் சோலைக்கு சென்று அவரிடம், ''மாலடியவரே! என்னை மன்னித்துவிடுங்கள். காஞ்சி நகருக்கு தாங்கள் வர வேண்டும்'' என விண்ணப்பித்தார். அவரும் திருமழிசையாழ்வாரை வேண்டினார். பின் அவரோ பெருமாளிடம் வேண்டினார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய

செந்நாப் புலவனும் போக்கொழிந்தான்

நீயும்உந்தன்

பைந்நாகப் பாய்விரித்துக் கொள்

என கூறியவுடன் பொருமாளும் அவ்வாறே அவருடன் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு திரும்பினார். இதனால் பெருமாளும், 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என போற்றப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us