ADDED : ஏப் 06, 2023 09:05 AM

தேவலோகத்தில் இந்திரன் தலைமையில் ஒரு நாள் சபை கூடியது. அங்கு பூலோகத்தில் வாழும் மனிதர்களில் உயர்ந்த குணம் உடையவர் யாராவது இருக்கிறாரா என்ற பேச்சு அவர்களுக்குள் தீவிரமானது. இந்திரனோ அங்கு கிருஷ்ண தேவன் என்னும் மன்னர் இருக்கிறார். அவரே நல்ல குணம் படைத்தவர் என்றார். அதைக்கேட்ட வானவர்களில் ஒருவர் ''நாம் யாரையும் புகழக்கூடாது என்பது நியதி. அதுவும் சாதாரண மானிடர்களை புகழ்வது நமக்கு இழுக்கு என்பது தலைவருக்கு தெரியாதா என்ன... அவரிடம் உள்ள குறைகளை எடுத்துக் காட்டுக்கிறேன்'' என சொல்லியவாறு பூலோகத்திற்கு புறப்பட்டார்.
மன்னர் வரும் வழியில் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்த நாய் போல வடிவம் எடுத்து பார்ப்பதற்கே சகிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் எடுக்குபடி அந்த இடத்தில் கிடந்தார். தேரோட்டியிடம் ரதத்தை மெதுவாக செலுத்தும் என சொல்லி விட்டு அவ்விடத்தை பார்த்தார் மன்னர். அவருடைய பார்வையோ வேறுவிதமாக இருந்தது.
ஆகா... இந்த இறந்த நாயின் பல்வரிசை எவ்வளவு அழகாக உள்ளது என அருகில் இருந்த மெய்காப்பாளரிடம் வாய் விட்டு சொன்னார். இதைக்கேட்ட நாய்வடிவில் இருந்த வானவர் உயிர்த்தெழுந்து உம்முடைய உத்தம எண்ணத்தை தாழ்வாக நினைத்தேன்.வானவர்களின் தலைவன் சொல்லியது உண்மை தான் என்ற அவர், உமது உத்தம குணத்தின் லட்சணத்தை எனக்கு புரியும் படி செய்துவிட்டீர்கள். தாங்களும் தங்களுடைய நாட்டு மக்களும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி விட்டு தேவலோகம் சென்றார்.
அப்போது வானில் பூமழை பொழிந்தனர் வானவர்கள். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு என்கிறது குறள். குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலரானது எப்படி நீரின் உயரத்திற்கு ஏற்ப உயருமோ அதுபோல மனிதர்களின் எண்ணத்திற்கு (உள்ளம்) ஏற்ப அவர்களது வாழ்வும் உயரும்.