Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/ராமபிரானை சரணடைவோம்

ராமபிரானை சரணடைவோம்

ராமபிரானை சரணடைவோம்

ராமபிரானை சரணடைவோம்

ADDED : ஏப் 06, 2023 09:29 AM


Google News
Latest Tamil News
சீதையை கடத்தி சென்றிருந்தார் இலங்கை அரசனான ராவணன். விஷயம் அறிந்த ராமபிரான் இலங்கைக்குச் செல்ல ஆயத்தமானார். அதற்கு கடல் கடந்து சென்றாக வேண்டிய சூழல். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது வானர சேனைகள் பாலம் அமைக்க தயாராக இருந்தனர். இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல சேது பாலம் அமைக்கும் பணி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரம்.

ராமபிரானுக்கு உதவ முன்வந்தது சாதாரணப் படை அல்ல. பட்சிகளும், விலங்குகளும் கொண்ட மாபெரும் படை. இலங்கை எந்தத் திசையில் உள்ளது என கழுகுகள் காட்டிக்கொடுத்தன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டன கரடிகள். பெரும் பாறாங்கற்களைக் சுமந்து கொண்டு பாலம் கட்டும் வேலையைச் செய்தன வானரங்கள்.

அப்போது துாரத்தில் இருந்த அணில்கள் இச்செயலை பார்த்தன. அவை தங்களுக்குள், 'ஆஹா! ராமபிரானுக்கு இவர்கள் கைங்கர்யம் செய்து புண்ணியத்தை தேடுகிறார்களே. நாமும் ஏதாவது கைங்கர்யம் செய்ய வேண்டுமே' என பேசின. நேரமும் கடந்தது. பால வேலைகளும் துரிதமாக நடந்தது.

அச்சமயம் அணில்கள் கூட்டம் கூட்டமாக கடலில் சென்று குளித்தன. பின் அங்கிருந்த மணலில் புரண்டு, வானரங்கள் இடும் பாறைகளுக்கு நடுவே மணலைச் சிந்திவிட்டு வந்தன. இதைப் பார்த்த வானரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அணில்களிடம், ''நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் பெரிய பாறைகளை எல்லாம் ஆங்காங்கே இட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்களோ அதற்கு இடையூறு செய்கிறீர்கள்'' என சொல்லின.

அதற்கு ஒரு அணில், ''அன்னை சீதாதேவியை மீட்க எங்களால் ஆன உதவியை, ராமபிரானுக்கு கைங்கர்யமாக செய்கிறோம்'' என பணிவாக சொல்லியது.

''என்னது நீங்களா ராமபிரானுக்கு உதவி செய்கிறீர்கள்'' என சிரித்தன வானரங்கள்.

''நாங்கள் கடலில் சென்று குளிப்பதால், கடல் தண்ணீர் வற்றிவிடும். பிறகு அந்த ஈரத்தோடு நாங்கள் மண்ணில் புரள்வதால் முதுகில் மண் ஒட்டிக் கொள்ளும். அந்த மண்ணை பாறைகளின் இடுக்கில்

சென்று உதறுவோம். அது பாறைகளை பிடித்துக் கொள்ளும் பூச்சு வேலையாகப் போய்விடும் அல்லவா. அதோடு பாறைகள் கரடுமுரடாக இருக்கும். இது ராமபிரானின் மென்மையான பாதங்களை பதம் பார்த்துவிடும். அதை தடுப்பதுதானே

எங்கள் முதல் வேலையாகும்'' என

ஒரு அணில் கூறியது.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமபிரான் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

சீதா தேவியை அடையும் காலம் நெருங்கி விட்டது என நம்பிக்கை கொண்டார். அணில்களை அன்போடு

வருடிக் கொடுத்தார். அன்று ராமபிரானின் கைகள் பட்டதால் ஏற்பட்ட அந்த மூன்று கோடுகளை அணில்கள் இன்றும் தாங்கிக் கொண்டிருக்கின்றன.

பார்த்தீர்களா...

அணிலை போல் நாமும் ஏதாவது ஒரு கைங்கர்யத்தில் ஈடுபட்டால், ராமபிரானின்

பாதத்தை அடையும் பாக்கியத்தை பெறலாம் அல்லவா!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us