ADDED : ஏப் 06, 2023 08:55 AM

ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகத் திழ்ந்தவர் ஸ்ரீராமபிரான். அவரது கதையை கேட்டாலும் சரி, படித்தாலும் சரி சொர்க்க வாழ்வு நிச்சயம் என்கிறார் கம்பர்.
வென்றிசேர் இலங்கையானை வென்ற மால்வீரன் ஓதநின்ற ராமாயணத்தின் நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோர் தாமும், நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே வெற்றிகள் பல பெற்று இறுமாந்திருந்த இலங்கை வேந்தனை அழித்தவர் திருமால் அவதாரமான ஸ்ரீராமபிரான். அவரது வாழ்க்கையில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் மிகச் சிறப்பாக ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளன.
அந்த நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்றையாவது படித்திருக்கக்கூடியவர், கேட்டிருக்கக்கூடியவர், 'இது நல்ல சம்பவம்' என்று பாராட்டக்கூடியவர் என யாருக்கும் நரக வாழ்க்கை கிடையாது. இம்மையிலேயே சொர்க்க வாழ்வு பெறுவர்.
பிறகு என்ன ஸ்ரீராமநவமி அன்று அவரது கதைகளை கேட்கலாம் அல்லவா. கேட்பது மட்டும் முக்கியமல்ல. அவர் வாழ்ந்து காட்டிய வழியில் பயணப்படுவது மிகவும் அவசியம்.