ADDED : ஆக 05, 2016 09:31 AM

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. இவருக்கு இந்த உயர்வான பெயர் வந்த காரணத்தைக் கேளுங்கள்.
கிருதயுகத்தில் அகோபிலத்தை (ஆந்திராவில் உள்ள ஊர்) பிரகலாதனின் தந்தை இரண்யன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்மம். பெருமாள் எந்த பக்தனை காக்கச் சென்றாலும் கருடன் மீது தான் எழுந்தருள்வார். கஜேந்திரன் என்ற யானையைக் காக்க அப்படித்தான் வந்தார். கருடனும் கணநேரத்தில் அந்த இடத்திற்கு போய்விடுவார். அதனால் தான் கோவில்களில் கருடசேவை இன்றும் பிரசித்தமாக இருக்கிறது.
பிரகலாதனைக் காக்க வேண்டிய அவசரம் கருதி, அவர் கருடனைக் கூட அழைக்காமல் உடனடியாக தூணிலிருந்து வெளிப்பட்டார். இதையறிந்த கருடன் மிகவும் வருத்தப்பட்டார். நரசிம்ம அவதாரத்தை பார்க்கவில்லையே என ஏங்கினார். தனக்கு அந்த வடிவத்தை காட்டியருள வேண்டினார். பெருமாள்
கருடனை அகோபிலம் சென்று தவம் செய்யும்படி கூறினார். கருடனும் அவ்வாறே செய்ய, ஒரு மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் அவர் காட்சியளித்தார். பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால், கருடனை 'கருடாழ்வார்' என்று போற்றுகின்றனர்.