ADDED : மார் 27, 2023 12:40 PM

ஆர்.கே.நாராயணன் எழுதிய 'தி கைடு' என்னும் ஆங்கில நாவலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் பரணீதரன். இதற்கு சன்மானமாக சாகித்ய அகாடமி மூலம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அதில் நுாறு ரூபாயை நாணயங்களாக மாற்றி காஞ்சி மஹாபெரியவருக்கு காணிக்கை கொடுக்க விரும்பினார். அப்போது சுவாமிகள் சென்னை திருவொற்றியூரில் முகாமிட்டிருந்தார்.
பரணீதரன் வந்ததற்கு மறுநாள் அனுஷ நட்சத்திரம்; அதாவது மஹாபெரியவரின் அவதார தினம் என்பதால் மல்லிகைப்பூ மாலையுடன் வந்து முதல்நாள் இரவே காத்திருந்தார். அதிகாலையில் கண் விழித்ததும் காணிக்கையை ஏற்றுக் கொண்டால், தான் கொண்டிருக்கும் பக்தி துாய்மையானது என்றும், சுவாமிகளின் அருள் தனக்கு பூரணமாக கிடைக்கும் என்றும் மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.
மஹாபெரியவர் தங்கியிருந்த அறைக்கு எதிரில் அமர்ந்து, 'ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர' என்னும் மந்திரத்தை ஜபித்தபடி இருந்தார். சுவாமிகள் எப்போது கதவைத் திறந்தாலும் தயார் நிலையில் தான் இருக்க வேண்டும் என அடிக்கடி எண்ணிக் கொண்டார். அதிகாலை ஐந்து மணிக்கு பூமாலையுடன் ஒரு பெண் அங்கு வந்தாள். தொடர்ந்து பக்தர்கள் பலரும் வரவே கூட்டம் அதிகரித்தது.
பரணீதரனின் மனதிற்குள், இத்தனை பக்தர்களையும் மீறி தன்னால் மஹாபெரியவரை நெருங்க முடியுமா என்ற கேள்வி உருவானது. கூட்டத்திற்கு பின்புறத்தில் வருத்தமுடன் நின்றிருந்தார். அறையின் கதவு திறந்த போது துாங்கியதற்கான அறிகுறி ஏதும் இல்லாமல் மலர்ந்த முகத்துடன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார் மஹாபெரியவர். பெண்கள் கற்பூர ஆரத்தி காட்ட பக்தர்கள் அனைவரும் வணங்கினர். ஒவ்வொருவரும் அவரவர் காணிக்கைகளை சுவாமிகளிடம் நீட்டினர்.
ஆனாலும் மஹாபெரியவர் கடைசியில் நின்றிருந்த பரணீதரனிடம் மல்லிகைப்பூ மாலை, நாணயங்களை வாங்கி விட்டு முதலில் ஆசியளித்தார். 'நம்பினார் கெடுவதில்லை' என்று மஹாபெரியவர் உரக்கச் சொல்வது போலிருந்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com