Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/இந்திரனை வென்றவன்

இந்திரனை வென்றவன்

இந்திரனை வென்றவன்

இந்திரனை வென்றவன்

ADDED : ஜூன் 14, 2024 01:21 PM


Google News
Latest Tamil News
ராவணனின் மகன் இந்திரஜித். இவனுக்கு மேகநாதன் என்றும் பெயருண்டு. காரணம் குழந்தையாக இருந்த போது கருக்கொண்ட மேகம் வானில் எப்படி இடித்துக் கொண்டு குமுறுமோ அப்படி கர்ஜித்தான். எதற்கும் அஞ்சாத அரக்கர்கள் கூட இவனது கர்ஜனை கேட்டு நடுங்கினர்.

ஒருமுறை தேவலோகம் சென்ற இவன், இந்திரனுடன் போரிட்டு அவனது வில்லைக் கைப்பற்றினான். அதனால் 'இந்திரஜித்' எனப் பெயர் பெற்றான். 'இந்திரனை வென்றவன்' என்பது பொருள். பின் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து எல்லா உலகங்களுக்கும் சென்று வரும் தேரையும், யார் கண்ணிலும் படாமல் யுத்தம் செய்யும் வரத்தையும் பெற்றான்.

அனுமன் இலங்கை வந்த போது, அவரை தன் பிரம்மாஸ்திரத்தால் கட்டி அரண்மனைக்கு இழுத்து வந்தான். பின் போரில் வானர வீரர்களை நாகாஸ்திரத்தை பயன்படுத்தி மூர்ச்சை அடையச் செய்தான்.

இப்படி வெற்றி வீரனாகத் திகழ்ந்தான். இவன் செய்த ஒரே தவறு தந்தையான ராவணனுக்கு துணைநின்றது தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us