Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நம்பிக்கை

நம்பிக்கை

நம்பிக்கை

நம்பிக்கை

ADDED : ஜூன் 14, 2024 01:01 PM


Google News
Latest Tamil News
காட்டு வழியே பயணம் சென்ற குருவும், சீடனும் இரவில் மரத்தடி ஒன்றில் உறங்கினர். மறுநாள் காலை சீடன், பழம் பறிக்கச் சென்றான். குருநாதர் தியானத்தில் அமர்ந்தார். அப்போது, '' சூரியன் மறைவதற்குள் ராஜநாகத்தால் தங்களின் சீடன் இறக்க நேரிடும்; முடிந்தால் தவசக்தியால் காப்பாற்றுங்கள்'' என அசரீரி ஒலித்தது. அந்த நேரத்தில் சீடனும் பழங்களுடன் வந்தான். இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். களைப்பின் மிகுதியால் ஒரு மரத்தின் கீழ் கண் அயர்ந்தான் சீடன். அவனை எப்படிக் காப்பாற்றுவது என சிந்தனையில் ஆழ்ந்தார் குருநாதர்.

அப்போது ராஜநாகம் ஒன்று சீடனின் அருகே வந்தது. அதைக் கண்ட குருநாதர், '' உன் நோக்கம் எனக்குத்தெரியும். அவனைக் கொல்லாதே'' என்றார்.

''இவனது ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது காலதேவனின் உத்தரவு! தாங்கள் தடுக்கலாமா'' என கேட்டது நாகம். '' ரத்தம் தானே வேண்டும். இதோ தருகிறேன்'' என சொல்லி சீடனின் கழுத்தில் கத்தியை வைத்தார் குருநாதர்.

துாங்குவது போல் சீடன் நடித்தான். அவனது ரத்தத்தை ராஜநாகத்துக்குகொடுத்தார் குருநாதர்.அங்கிருந்து நாகம் புறப்பட்டது. காயத்திற்கு மருந்து இட்ட பின் துாங்கச் சென்றார். சிறிது நேரத்தில் இருவரும் விழித்தனர். கழுத்தில் மருந்து இருப்பது பற்றி சீடன் ஒன்றும் கேட்கவில்லை.

''குருவே! பயணத்தை தொடரலாமா?'' என கேட்க அவரோ, '' உன் கழுத்தில் கீறினேனே! உனக்கு தெரியாதா?'' எனக் கேட்டார். ''குருவே! பாம்பு வந்ததையும், என் ரத்தத்தை பாம்புக்கு கொடுத்ததையும் அறிவேன். தங்களால் எனக்கு தீங்கு நேராது என்ற நம்பிக்கையால் எதுவும் கேட்கவில்லை'' என்றான். உடனே அவனைத் தழுவிக் கொண்டார்.

இவனைப் போல நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடைந்தால் தீமையும் நன்மையாக முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us